தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதகை மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - மருத்துவமனையில் தீ விபத்து

நீலகிரி: அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் மருந்து பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.

Ooty hospital
Ooty government hospital fire accident

By

Published : May 23, 2020, 6:40 PM IST

நீலகிரி மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை உதகை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை உள் நோயாளி பிரிவு மற்றும் சித்த வைத்தியம் பிரிவு அருகே அமைந்துள்ள கட்டிடத்தில் திடீரென தீ பற்றியது.

இதைப்பார்த்த நோயாளிகள் உடனடியாக வெளியேறினர். பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தீயினால் அங்கிருந்த சில மருந்து பொருள்கள் எரிந்து நாசமாகின. மேலும், இந்தத் தீ விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் கல் வைத்த இளைஞர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details