ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு கோடை சீசனையொட்டி 123-ஆவது மலர் கண்காட்சி வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கான ஆயுத்தப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக உள்ளது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மலர் கண்காட்சியை பார்வையிட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவர்.
ஊட்டியில் மலர் கண்காட்சி; அலங்கார பணிகள் தீவிரம்! - flower show
உட்டி: ஊட்டியில் 123 ஆவது மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் அலங்கார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மலர் கண்காட்சிக்காக ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய வெளிநாடுகளில் இருந்து 230 ரகங்களை சேர்ந்த மலர் விதைகள் பெறப்பட்டு நர்சரியில் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டன. முதற்கட்டமாக அலங்கார மேடையில் 30 ஆயிரம் மலர் தொட்டிகள் அடுக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் அமர நிழற்குடைகள், வரவேற்பு வளைவுகள் போன்றவற்றை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தாவரவியல் பூஙகாவை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இது சுற்றுலா பயணிகள் பார்வைக்கு விருந்தளிக்கிறது.