மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர் காலம் ஆகும். இதனால் இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக இரவில் புல்வெளிகள், வாகனங்களின் மீது விழும் பனித்துளிகள், குறைந்த வெப்பநிலை காரணமாக பனிக்கட்டிகளாக மாறிவிடும்.
நவம்பர் 1ஆம் தேதி தொடங்க வேண்டிய குளிர் காலம் மழை காரணமாக சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. குளிர் காலம் தொடங்கியதால் இன்று காலை உதகை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள புல்வெளிகளில் பனி துளிகள் உறைந்து வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது. வீடுகள் மற்றும் வாகனங்களின் மீதும் உறைபனி படிந்து காணப்பட்டது.
காரின் மீது படிந்துள்ள பனி உதகை தாவரவியல் பூங்கா, ரயில் நிலையம், குதிரை பந்தைய மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் உறைபனி காணப்பட்டன. குளிர் காலம் தொடங்கியதை அடுத்து இன்று காலை (நவ.,11) குறைந்த பட்ச வெப்பநிலையாக 7 டிகிரி செல்சியஸ் பதிவானது. கடும்குளிர் நிலவியதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வர முடியாமல் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதேபோல, உறைபனி பொழிவு தொடர்ந்தால் காய்கறிகள், தேயிலை விவசாயம் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்படும்.
உதகையில் தொடங்கியது உறைபனி பொழிவு இதையும் படிங்க:'இது என்ன உதகையா..? காஷ்மீரா..? ஆத்தி என்னா குளுரு' - உறைபனி பொழிவால் அவதியுறும் மக்கள்