நீலகிரி மாவட்டம் உதகையில் இந்தாண்டிற்கான கோடை சீசன் களைக்கட்டியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். உதகை அரசு தாவரவயில் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்த தொடங்கி வைத்தார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த மலர் கண்காட்சியை காண சுமார் 5 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.
மலர் கண்காட்சி: உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! - உதகை குவியும் சுற்றுலாப் பயணிகள்
நீலகிரி: தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் 123ஆவது மலர் கண்காட்சியை காண இரண்டவது நாளாக உதகையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம் கார்னேசியன் மலர்களைக் கொண்டு 22 அடி உயரத்தில் பிரமாண்ட நாடாளுமன்றக் கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்றாயிரம் ஆர்கிட் மலர்களை கொண்டு தொட்டியிலிருந்து பல வண்ண மலர்கள் கொட்டுவது போல மலர் அருவியும், அதன் கீழ் 5 ஆயிரம் மலர் தொட்டிகளும் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.
இவை அனைத்தையும் இரண்டாவது நாளாக இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் மலர் மேடைகளில் அடுக்கி வைக்கபட்டுள்ள 30 ஆயிரம் மலர் தொட்டிகளில் பூத்து குலுங்கும் பிக்கோனியா, மேரிகோல்டு, சால்வியா, லில்லியம்ஸ் உள்ளிட்ட 186 வகையான மலர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. மேலும் அங்கு சுற்றுலா பயணிகள் புகைபடம் எடுக்க ஏதுவாக செல்பி மேடைகளும் அமைக்கபட்டுள்ளது.