தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவிற்கு எதிராகக் களமிறங்கும் நீலகிரி உழவர்கள் - நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி: வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறாத மத்திய அரசைக் கண்டித்து பாஜக போட்டியிடும் உதகையில் எதிர் பரப்புரை செய்யப்போவதாக உழவர்கள் அறிவித்துள்ளனர்.

விவசாயிகள்
விவசாயிகள்

By

Published : Mar 20, 2021, 10:54 PM IST

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் ஏராளமான உழவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டமானது 100 நாள்களைக் கடந்து நடைபெற்றுவரும் நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் எதிர்ப்புப் பரப்புரை செய்வதாகப் பல்வேறு விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் நீலகிரி மாவட்ட விவசாயிகள், தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, “நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் வேட்பாளர்கள் பிரிவு 17 நிலத்தில் வசித்துவரும் மக்களுக்குப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யானை வழித்தட நிலம் 515 ஏக்கர் என்று கூறிய நிலையில், அதனை 7 ஆயிரம் ஏக்கராக மாற்றியதை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் போராடிவரும் உழவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். எனவே நீலகிரியில் பாஜக போட்டியிடும் உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் மத்திய அரசை எதிர்த்தும், வேளாண் சட்டம் குறித்து எடுத்துக் கூறி எதிராகப் பரப்புரையில் ஈடுபடப் போகிறோம்” என்று கூறியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details