நீலகிரி மாவட்டம் உதகை அருகே அதிகரட்டி, குன்னகம்பை, சேலாஸ் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துவருகின்றனர். இந்நிலையில், சில நாட்களாக யானைக் கூட்டம் கிராமப் பகுதிக்குள் வந்து மக்களை அச்சுறுத்திவருகிறது.
தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்! - Elephant herd
நீலகிரி: உதகை அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் யானைக் கூட்டம் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
elephant
மேலும், யானைக் கூட்டம் தற்போது தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளதால் மக்கள் தேயிலைத் தோட்டத்திற்குள் செல்ல முடியாமல் உள்ளனர். மேலும், தேயிலை பறிக்கும் சமயத்தில் யானைக் கூட்டம் அங்கு இருப்பதால் பசுந்தேயிலையை பறிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே வனத் துறையினர் தேயிலை தோட்டத்தில் உள்ள யானைகளின் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.