தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியர் குறித்து தவறான செய்திகள்: சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்! - நீலகிரி துணை காவல் கண்காணிப்பாளர்

நீலகிரி: மாவட்ட ஆட்சியர் மீது சமூக வலைதளங்களில் தவறான செய்தியை வெளியிட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

ooty DSP

By

Published : Sep 21, 2019, 10:49 PM IST

இது தொடர்பாக மாவட்ட துணை கண்காணிப்பாளர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த சில நாட்களுக்கு முன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் குறித்தும், மாவட்டச் செயல்பாடுகள் குறித்தும் தனியார் கட்டடங்களுக்கு ஆணை வழங்கி அதன் மூலம் பணம் பெற்றுக் கொண்டதாக சில சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உதகை மேற்கு G1 காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததன் பெயரில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சரவணன் செய்தியாளர் சந்திப்பு

மேலும், சமூக வலைதளங்களில் மாவட்ட ஆட்சியரின் கண்ணியத்திற்கும், சுயமரியாதைக்கும் களங்கம் விளைவிக்கக்கூடிய வகையில் சில விஷமிகள் பரப்பிய செய்தியின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

குறிப்பாக, செய்தியை வெளியிட்ட நபர்கள் மீதும் அதை தொலைபேசி, வாட்ஸ் ஆப் மூலம் பரிமாற்றம் செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாகப் படிக்க: அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை: நீலகிரி ஆட்சியர் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details