மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட பத்து பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு! - court adjourned the kodanadu case
உதகை: கொடநாடு காவலாளி கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை ஜனவரி நான்காம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
kodanadu case
இதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பத்து பேரில் ஒருவரை தவிர மீதமுள்ள ஒன்பது பேர் நேற்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராயினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் ஜனவரி 4ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அன்றைய தேதியில் பத்து பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.