கடந்த சில ஆண்டுகளாக நிலச்சரிவு காரணமாக இயற்கை வளங்கள் அழிதல், உயிரிழப்புகள் போன்றவை ஏற்பட்டுவருகின்றன. குறிப்பாக மலை பிரதேசங்களில் அதிகளவு மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில் மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த சில ஆண்டுகளாக நிலச்சரிவு அதிகமாகிவருகிறது. இதற்கு மழை ஒரு காரணமாக இருந்தாலும், சாய்வான பகுதிகளில் கட்டடங்கள் கட்டுவதாலும், தோட்டங்கள் போன்றவற்றை அழித்து வீடுகள் கட்டுவதாலும் நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுபோன்ற நிலச்சரிவை கட்டுப்படுத்துவது குறித்த கருத்தரங்கு நிலகிரியில் இரண்டு நாள்கள் நடைபெற்றன. இந்த கருத்தரங்கில் இயற்கை வளங்களை அழித்தல், காலநிலை மாறுபாடுகள், மலை பகுதிகளில் அதிகரிக்கும் மக்கள் தொகை, முறையின்றி கட்டடங்களை கட்டுதல் போன்றவை மலை பகுதிகளில் அதிகளவு நிலச்சரிவு ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு சரிவான நிலங்களை மேலாண்மை செய்வதற்கு சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது என இந்த கருத்தரங்கில் கூறப்பட்டுள்ளது.