நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி, புலிகள் காப்பகத்தை ஒட்டிய கிராமங்களுக்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மசினகுடி, மாயார், சிங்காரா, பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம், சிறியூர், ஆனைக்கட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது. பட்டாசு வெடிப்பதால் கருவுற்ற வன விலங்குகள் அச்சத்தில் ஓடும்போது கரு கலைய வாய்ப்புள்ளது.