நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளதாகவும், முதல் கட்டமாக 27ஆம் தேதி குன்னூர்,கோத்தகிரி ஒன்றியத்திற்கும், இரண்டாம் கட்டமாக 30ஆம் தேதி உதகை,கூடலூர் ஒன்றியத்திற்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா கூறினார்.
உதகையில் இன்று தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடையே பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதோடு, கையேடும் வழங்கப்பட்டதாக கூறினார்.
மேலும், மாவட்டத்தில் 393 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 35 கிராம ஊராட்சி தலைவர்கள், 59 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஆறு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுவதாகவும் உள்ளாட்சி பணிக்காக 3,300 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், இவர்களுக்கான முதல் பயிற்சி 14ஆம் தேதியும், இரண்டாம் பயிற்சி 21ஆம் தேதியும், மூன்றாவது, இறுதி பயிற்சி 26, 29 ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் கூறினார்.