உதகையில் மலர் கண்காட்சிக்கான முதல் சீசன் ஏப்ரல்,மே மாதத்திலும், இரண்டாவது சீசன் செப்டம்பர் முதல் நவம்பர் வரையும் இருக்கும் . இந்த சீசன்களின் போது நிலவும் இதமான காலநிலையை அனுபவித்து செல்ல ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இரண்டாவது சீசனில் சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலர் கண்காட்சிக்கு ஊட்டி தாவரவியல் பூங்கா தயாராகிறது!
உதகை: மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா தயார் செய்யப்படுகிறது என தோட்டக்கலைத்துறை அலுவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2.5லட்சம் மலர் செடிகள் நடவுசெய்யும் பணி தொடங்கியுள்ளது.இன்கா மேரி கோல்டு, ஆஸ்டர், கேலண்டுள்ளா, பெட்டுனியா உள்ளிட்ட 70 வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யபடுகிறது . அதுமட்டுமின்றி சீசனையொட்டி நடைபெற உள்ள மலர் கண்காட்சியில் வைப்பதற்காக 10 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர் செடிகளை நடவு செய்யும் பணியும் தொடங்கியுள்ளது என தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பூங்காவில் பல்வேறு பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது நடவு செய்யும் மலர் செடிகள் அனைத்தும் செப்டம்பர் முதல் வாரத்தில் பூத்துக் குலுங்கத் தொடங்கும் என்பதால் வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது