தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களை அச்சுறுத்தும் காட்டெருமைக் கூட்டம்; அச்சத்தில் தோட்டத் தொழிலாளர்கள்! - குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டெருமைகள்

நீலகிரி: உதகை மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்ட வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ooty-bison-problem

By

Published : Nov 16, 2019, 10:46 PM IST

மலை மாவட்டமான நீலகிரியின் உதகை மற்றும் கோத்தகிரி பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டெருமைகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக உதகை மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் நடுவே கூட்டம் கூட்டமாக உலாவரும் காட்டெருமைகள் மாலை நேரங்களில் சாலைகளைக் கடந்தும், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தும் மக்களை அச்சுறுத்தி வருகிறது.

மக்களை அச்சுறுத்தும் காட்டெருமைக் கூட்டம்

உதகை அருகே கட்டபெட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டெருமைகள் கூட்டம், மக்கள் இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் அவர்களை அச்சுறுத்தும் வகையில் உலா வந்ததால், அப்பகுதி மக்கள் நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியில் உலாவரும் காட்டெருமைகள் அவ்வப்போது சாலைகள் நடுவே இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் மிரட்டுவதால் வனத்துறையினர் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பகல் நேரத்தில் உலா வரும் காட்டெருமை!

ABOUT THE AUTHOR

...view details