பச்சை ஆடையைணிந்து, வானை முட்டும் 24 சிகரங்களுடன் அமைதியுடன் காட்சியளிக்கு ஒரு இடம் மலைகளின் அரசியான உதகை. இந்த மலைகளின் அரசியின் அழகை மட்டுமின்றி, தங்களின் முன்னோர்கள் காலம்காலமாக பின்பற்றி வரும் காலச்சாரம், பழக்க வழக்கங்களை பாதுகாத்து, பண்டையக் கால விழாக்களை கொண்டாடியும் வருகின்றனர்.
அந்தவகையில், உதகையின் மண்ணின் மைந்தர்களான படுகர் இன மக்கள் தங்களது பாராம்பரிய பண்டிகையான ‘ஒச அணா’ வை கொண்டாடினர். விழாவின் முக்கிய நிகழ்வான 33 கிராமங்களை சேர்ந்த படுகர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து நிலகங்களுக்கு கப்பம் கட்டினர். ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த பண்டிகையில், வயது வித்தியாசமின்றி, தங்களது பாராம்பரிய நடனங்களை ஆடினர்.