நீலகிரி:தேசிய அளவிலான குதிரை சாகச போட்டிகளில் ஊட்டியை சேர்ந்த 12 வயது சிறுவன் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறார்.
9 தங்கம், 4 வெள்ளி என 30க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று அசத்தி வரும் சிறுவனுக்கு ஆசியன் குதிரை சாகச போட்டி, ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட போதிய வசதிகளை அரசு ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தை பருவம் முதலே குதிரை மேல் ஆர்வம்
உதகை அருகே உள்ள பெங்கால் மட்டம் பகுதியை சார்ந்தவர் ஜப்ரி கேண்டில். தேயிலை விவசாயி ஆன இவரது மகன் நீல் கேண்டில் உதகையில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்துவருகிறார்.
12 வயதான நீல் கேண்டில் குழந்தை பருவம் முதலே குதிரைகள் மீது அதிக ஆர்வம் கொண்டவராக உள்ளார்.
இதனால் தந்நை ஜப்ரி கேண்டில் குதிரைகளை வாங்கி வளர்த்து வருகிறார். அந்தக் குதிரைகள் மீது அமர்ந்து சவாரி செய்ய தொடங்கிய சிறுவன் நீல் கேண்டில் தற்போது தேசிய அளவில் நடைபெறும் ஈக்கோ ஸ்டேரின் என்றழைக்கபடும் குதிரை சாகச போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை குவித்து வருகிறார்.
குதிரைகளை பரிசளித்த முதலாளிகள்
இவரது திறமையை பார்த்து குதிரை பந்தையங்களில் கலந்து கொள்ளும் சிறந்த குதிரைகளை பெருமுதலாளிகள் பரிசாக அளித்துள்ளனர். பரிசாக பற்ற குதிரைகள் மூலம் சிறுவன் நீல் கேண்டில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ்நாடு அளவில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் இந்தச் சிறுவன் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 9 முறை தங்கம் வென்று அசத்தி உள்ளார்.
மேலும் 4 வெள்ளி பதக்கங்களையும், 6 வெண்கல பதக்கங்களையும் குவித்து உள்ளார். இது வரை 30க்கும் மேற்பட்ட பதங்களை வென்றுள்ளார்.
ஆசிய போட்டி, ஒலிம்பிக்கில் பங்குப்பெற ஆர்வம்
தமிழகத்தில் இவரை போல 2 பேர் மட்டுமே தேசிய அளவில் சப்-ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டு வருகின்றனர். இவர் தற்போது 6 குதிரைகள் மூலம் போட்டிகளில் மும்பை, டெல்லி, பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று தமிழ்நாட்டில் சிறந்த குதிரை சாகச வீரராக திகழ்ந்து வருகிறார்.
எதிர் வரும் ஆசியன் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் சிறுவன் நீல் கேண்டில் அதற்கான விளையாட்டு மைதானம் இன்றி போதிய வசதிகள் இன்றியும் உள்ளார்.
சர்வ தேச அளவில் கார் பந்தையத்திற்கு அடுத்த படியாகா குதிரை சாகச போட்டிக்கு தான் அதிக செலவாகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் தனது மகனுக்கு உதவி செய்ய வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:TOKYO PARALYMPICS: இந்தியாவுக்கு 19 பதக்கங்கள்; 24ஆவது இடம்!