நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக பபர் ஜோன் எனப்படும் வெளி பகுதி 360 சதுர கிலோ கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும். முதுமலையில் ஆயிரக்கணக்கான வன விலங்குகள் மற்றும் அரிய வகை மரங்கள், தாவரங்கள் உள்ளன.
வருடந்தோறும் கடும் வறட்சி ஏற்பட்டு பல ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து சேதமாகி வரும் நிலையில், தற்போது வனப்பகுதியில் கடும் வெயிலின் காரணமாக வனப்பகுதி வறட்சியாக காணப்படுகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதனை தடுக்கும்விதமாக வனப்பகுதிக்குள் உள்ள சாலை ஓரங்களில் செயற்கையாக தீ மூட்டி தீ தடுப்பு நடவடிக்கைகளில் வனத்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 700 கிலோமீட்டர் தூரத்திற்கு 40 மீட்டர் சாலையின் இரு புறங்களில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றனர்.
ootty muthumalai forest fire action அதன் முதற்கட்டமாக முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன.
இதையும் படிங்க :‘சென்னையின் சீர்மிகு நகர திட்டத்திற்கு கருத்து தெரிவியுங்கள்’ - ஆணையர் வேண்டுகோள்