தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அடுத்த தேர்தலுக்கு பிறகு திமுக மட்டுமே நிலைத்து இருக்கும்" ...துரைமுருகன் - இந்தி திணிப்பு தீர்மாண விளக்க பொதுக்கூட்டம்

தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சி மட்டுமே நிலைத்து இருக்கும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 7, 2022, 8:22 AM IST

நீலகிரி மாவட்டம் திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் இந்தி திணிப்பு தீர்மாண விளக்க பொதுக்கூட்டம் குன்னூர் வி.பி.தெருவில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக பொதுச்செயலாளரும்,தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிறப்புரையாற்றினார்.

உலகத்திலேயே ஐம்பது ஆண்டு காலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்த வரலாறு எவருக்கும் கிடையாது. ஆனால் ஒரு கட்சியில் ஐம்பது ஆண்டுகாலம் தலைவராக இருந்தவர் திமுக மறைந்த தலைவர் கருணாநிதி மட்டும் தான்.

மகத்தான ஜாம்பவானாக திகழ்ந்த கருணாநிதி மிசாவில் இருந்து இக்காட்சியை காப்பாற்றியதுடன், பதிமூன்று ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாத திமுக வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்.இன்னொரு முறை தமிழ்நாட்டில் திமுக போன்ற ஒரு கட்சி உருவாக முடியாது என்றும் அமைசச்ர் கூறினார்.

இதையும் படிங்க : அதிகாரத்தின் கைக்கூலியாக இருக்கும் ஆளுநர்கள் - அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details