தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரி சுற்றுலா தலங்களில் 50% சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அனுமதி! - Nilgiris District Collector

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் நாளை (ஏப்.10) முதல் 50 சதவீத சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள் என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா தலங்களில் நாளை முதல் 50% சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதி
சுற்றுலா தலங்களில் நாளை முதல் 50% சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதி

By

Published : Apr 9, 2021, 8:39 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் உதகையில் நடைபெற்றது.

அதில் மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசென்ட் திவ்யா, காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கபட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ’’நீலகிரி மாவட்டத்தில் 155 பேருக்கு கரொனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இது வரை மாவட்டத்தில் 88 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடபட்டுள்ளது.

மேலும், அதிக கரோனா பாதிப்பு உள்ள பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கபட்டு அந்தப் பகுதியில் காவல் துறையினர் மற்றும் சுகாதார துறையினரை கொண்டு கண்காணிக்கப்படும். குறிப்பாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து தடையை மீறி வெளியே வருபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் நாளை முதல் 50% சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். சுற்றுலா பயணிகள் புல்வெளிகளில் அமரவும், விளையாடவும் தடைவிதிக்கப்படும்” என்றார்.

மேலும், “அரசு பேருந்துகளில் பயணிகளை நின்று செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.49 லட்சம் அபராதமாக வசூலிக்கபட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காலமானார் சென்னையின் 10 ரூபாய் மருத்துவர்

ABOUT THE AUTHOR

...view details