தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக உணவு நாள்: இணைய வழி கருத்தரங்கு - இணையவழி கருத்தரங்கம்

நீலகிரி: ஊட்டச்சத்து உணவுகள் குறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு - சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய கள அலுவலர் சிவரஞ்சினி விளக்கம் அளித்தார்.

இணையவழி கருத்தரங்கம்
இணையவழி கருத்தரங்கம்

By

Published : Oct 17, 2020, 7:00 PM IST

உலக உணவு தினத்தை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு - சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் இணைந்து குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியிலிருந்து இணையவழி உணவுப் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கை நடத்தின.

இந்தக் கருத்தரங்கிற்கு தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் ரமேஷ், கல்லூரி முதல்வர் ஷீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊட்டச்சத்து உணவுகள் குறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு - சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய கள அலுவலர் சிவரஞ்சினி விளக்கம் அளித்தார். தொடர்ந்து நுகர்வோர் பாதுகாப்பு - உணவு பாதுகாப்பு குறித்து சந்தேகங்கள் விளக்கங்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு - ஆராய்ச்சி மைய பணியாளர்கள் கல்லூரி பேராசிரியர் சிந்தியா ஜார்ஜ், குடிமக்கள் நுகர்வோர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details