தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுக ஆட்சி மக்களுக்கு கிடைத்த தண்டனை; அதிமுக-அமமுக இணைய வாய்ப்பில்லை'- டிடிவி தினகரன்

வெற்று விளம்பரங்களால் ஓடிக்கொண்டிருக்கும் திமுக ஆட்சி மக்களுக்கு கிடைத்த தண்டனை; அதிமுக, அமமுக இணைய வாய்ப்பே இல்லை என டிடிவி தினகரன் கூறினார்.

”ஓராண்டுகால திமுக ஆட்சி என்பது மக்களுக்கு கிடைத்த தண்டனை”-டிடிவி தினகரன்
”ஓராண்டுகால திமுக ஆட்சி என்பது மக்களுக்கு கிடைத்த தண்டனை”-டிடிவி தினகரன்

By

Published : Jun 7, 2022, 9:19 AM IST

நீலகிரிமாவட்டத்தில் அமமுக ஆலோசனைக் கூட்டம் குன்னூரில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின் கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது “ஓராண்டுகால திமுக ஆட்சி என்பது மக்களுக்கு கிடைத்த தண்டனை” என்றார். தொடர்ந்து, சசிகலா பாஜகவிற்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம் என நயினார் நாகேந்திரன் கூறிகிறாரே என்ற கேள்விக்கு “இது குறித்து சசிகலாவிடம்தான் கேட்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

”ஓராண்டுகால திமுக ஆட்சி என்பது மக்களுக்கு கிடைத்த தண்டனை”-டிடிவி தினகரன்

மேலும் அவர் திமுக ஆட்சி வெற்றுவிளம்பரங்களால் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, லஞ்ச ஊழல் ஓழிப்பு என்பதெல்லாம் ஊடக வெளிச்சத்திற்காக ஸ்டாலின் செய்கிறார். அவரின் தந்தை (கருணாநிதி) சிலை திறப்பதற்கு பதிலாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

செல்லும் இடமெல்லாம் ஸ்டாலினிடம் மக்கள் இதைத்தான் கேட்கிறார்கள், காவல்துறையினருக்கு அதிகாரம் இருப்பதால் அத்துமீறி செயல்படுவது மக்கள் மத்தியில் அவப்பெயரைத்தான் ஏற்படுத்துகிறது. ஆகவே காவல் துறையினர் கவனமுடன் செயல்படவேண்டும்” என்றார்.

மேலும் அதிமுக மற்றும் அமமுக இணையதற்கு வாய்ப்பில்லை என்று கூறிய டிடிவி தினகரன் கோடநாடு காெலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை அரசு கண்டறிய வேண்டும் என்றார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தாமல் பாடல்கள் கேட்கத் தடை!

ABOUT THE AUTHOR

...view details