நீலகிரி:ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27ஆம் தேதி உலகச் சுற்றுலா நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த ஆண்டிற்கான சுற்றுலா நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் உதகை படகு இல்லத்தில் படகுப் போட்டி நடத்தப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும்விதமாக நடைபெற்ற இந்தப் போட்டியினை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
அதில் ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர், பெண்கள் இரட்டையர் என மூன்று பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் பங்கேற்ற சுற்றுலாப் பயணிகள் போட்டிபோட்டு இலக்கை நோக்கி படகுகளை ஓட்டிச் சென்றனர்.
போட்டிகளில் வெற்றிபெற்ற சுற்றுலாப் பயணிகளுக்குத் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பாகப் பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, கோலப் போட்டி நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:திருவாரூர் மாணவிக்கு சர்வதேச போட்டியில் பங்கேற்க வாய்ப்பு - உதவுமா தமிழ்நாடு அரசு?