நீலகிரி:குன்னூர் அருகேயுள்ள காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(60). இவரது, மகன் கிருஷ்ணன் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்துவருகிறார்.
ராஜேந்திரனக்கு உடல்நிலை சரியில்லை என்று குன்னூர் அரசு மருத்துவமனையில் அவர் மகன் அனுமதித்திருந்த நிலையில், நேற்று(ஆகஸ்ட் 3) ராஜேந்திரன் திடீரென குன்னூர் கிளை நீதிமன்றம் முன்பு மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், பொதுமக்கள் அவரைத் தடுத்து நிறுத்தி முதியோர் காப்பகத்தில் அவரை ஒப்படைத்தனர்.