நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் பகுதியில் வனப்பகுதி அதிகமாக உள்ளதால் வனப்பகுதியை ஒட்டி அதிக அளவிலான பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகின்றனர். பொருளாதாரம் மற்றும் விழிப்புணர்வு குறைவாக உள்ள இந்த மக்களுக்கு தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள பழங்குடியினர் கிராமமான வாச்சி கொல்லி, கங்குரு மூலா பகுதிக்கு தேவர்சோலை பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் தலைமையில் சென்ற அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து மக்களுக்கும் சோப்பு, முகக் கவசங்கள் வழங்கினார்கள்.