தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹெலிகாப்டர் விபத்து - நினைவுத்தூண் அமைக்க ஆய்வு - helicopter crash in nigiris

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்து ஒரு மாத காலமாகியும் பாதிப்பு தங்கள் மனத்தைவிட்டு இன்னும் நீங்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நினைவுத்தூண் அமைக்க ஆய்வு
நினைவுத்தூண் அமைக்க ஆய்வு

By

Published : Jan 8, 2022, 5:59 PM IST

நீலகிரி: குன்னூர் காட்டேரி அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் டிசம்பர் 8ஆம் தேதி ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துள்ளானது. இதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.

விபத்து நடைபெற்று ஒரு மாத காலமாகியும் விபத்தால் ஏற்பட்ட தாக்கம் இன்னும் நீங்கவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் உருக்கமாகக் கூறினார்.

ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில் முதல்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் மின்சாரத் துறையினர் மின் விளக்கு கம்பங்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் விபத்து நடந்த பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் சென்று ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

நினைவுத்தூண் அமைக்க ஆய்வு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு, நஞ்சப்பசத்திரம் பகுதியில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ள நிலையில் அது குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்

ABOUT THE AUTHOR

...view details