தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவக் குணம் மிகுந்த ஜாதிக்காய் ஊறுகாய்: களைகட்டும் விற்பனை - ஜாதிக்காய் ஊறுகாய் விற்பனை

நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்கா பழவியல் நிலையத்தில் மருத்துவக் குணம் மிகுந்த ஜாதிக்காய் ஊறுகாய் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

களை கட்டும்  ஜாதிக்காய் ஊறுகாய் விற்பனை
களை கட்டும் ஜாதிக்காய் ஊறுகாய் விற்பனை

By

Published : Oct 17, 2020, 3:32 PM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பழவியல் நிலையத்தில், ஜாம், பழரசம், ஊறுகாய் போன்றவை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம். இங்கு விளையும் ஸ்ட்ராபெரி, பிளம்ஸ் ஆகியவை மட்டுமின்றி திராட்சை, ஆரஞ்ச், பைன் ஆப்பிள் போன்றவற்றை கொண்டு பழரசம் தயாரிக்கப்படுவதோடு, ஜாதிக்காய், மால்மெட் ஆரஞ்ச், லெக்கோட் ஆகியவற்றின் ஜாம், ஊறுகாய் போன்றவையும் தயாரிக்கப்படுகிறது.

கடந்த மே மாதம் பொள்ளாச்சியிலிருந்து வரவழைக்கப்பட்ட 300 கிலோ ஜாதிக்காய்கள் மூலம், பழவியல் நிலையத்தில், ஊறுகாய், ஜெல்லி தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. தற்போது 500 கிலோ ஜாதிக்காய்களில் ஊறுகாய் தயாரிக்கும் பணிகள் தொடங்கின. அரை கிலோ ஜாதிக்காய் ஊறுகாய் 110 ரூபாய்க்கும், 300 கிராம் ஜாதிக்காய் ஜெல்லி 90 ரூபாய்க்கும் விற்கப்பட்டுவருகிறது. இவை தோட்டக்கலைக்குச் சொந்தமான கடைகளில் விற்பனை செய்யப்படும்.

களைகட்டும் ஜாதிக்காய் ஊறுகாய் விற்பனை

பயன்கள்

ரத்தத்தில் கொழுப்பை குறைக்கிறது. ரத்த வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயை தடுக்கும் என தாய்லாந்து நாட்டின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வயிற்று வலி, வாயுத் தொல்லை உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்னைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. குறிப்பாக நரம்பு தளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் குணம் உடையது. இதன் மருத்துவக் குணங்களுக்காக விரும்பி வாங்குவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:சிம்ஸ் பூங்கா: ஜாதிக்காய் ஊறுகாய், ஜெல்லி தயாரிக்கும் பணி துவக்கம்!

ABOUT THE AUTHOR

...view details