தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேயிலை தோட்ட தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ்! - நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி: மாவட்டத்தில் விதிமீறி செயல்பட்ட 30 தேயிலை தோட்ட தொழிற்சாலைகளுக்கு தென்னிந்திய தேயிலை வாரியம் விளக்க நோட்டீஸ் வழங்கி உள்ளது.

notice-to-tea-plantation-factories
notice-to-tea-plantation-factories

By

Published : Jan 14, 2021, 9:27 AM IST

நீலகிரி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் தேயிலை தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. தரமற்ற தேயிலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளால், தென்னிந்திய தேயிலை விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர், டிசம்பரில் நீலகிரியில் உள்ள 43 தோட்ட தொழிற்சாலைகளில் இந்திய தேயிலை வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

அப்போது, சுகாதாரமின்மை, சட்ட ஆவணங்கள் பராமரிப்பின்மை போன்ற பல்வேறு காரணங்களுக்காக, 30 தோட்ட தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தேயிலை தொழிற்சாலைகளிடம் இருந்து சரியான விளக்கம் கிடைக்காவிட்டால் தேயிலை சந்தைப்படுத்துதல் கட்டுப்பாடு ஆணை மற்றும் தேயிலை கழிவு கட்டுப்பாடு ஆணையின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தலைவர்கள் கொண்டாடும் 'மாஸ்டர்' பொங்கல்

ABOUT THE AUTHOR

...view details