தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் குழந்தைகள் தனியாக இருந்த வீட்டிற்குள் புகுந்த வடமாநில இளைஞர்கள் - the nilgiris

பெண் குழந்தைகள் தனியாக இருந்த வீட்டிற்குள் இரண்டு வட மாநில இளைஞர்கள் புகுந்தது கூடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண் குழந்தைகள் தனியாக இருந்த வீட்டிற்குள் புகுந்த வடமாநில இளைஞர்கள்
பெண் குழந்தைகள் தனியாக இருந்த வீட்டிற்குள் புகுந்த வடமாநில இளைஞர்கள்

By

Published : Apr 22, 2021, 1:41 AM IST

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நீமினி வயல் பகுதியில் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் போர்வை விற்பது போன்று அந்த பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நேரம் பார்த்து இரு பெண் குழந்தைகள் மட்டும் தனியாக வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

பெண் குழந்தைகள் தனியாக இருந்த வீட்டிற்குள் புகுந்த வடமாநில இளைஞர்கள்

அந்த வீட்டின் அருகே வந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் குழந்தைகள் தனியாக இருந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதனை அறிந்த குழந்தைகள் சத்தம் போட்டதை அடுத்து அங்கு உள்ள மக்கள் திரண்டு இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர், காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட நிலையில் இரண்டு இளைஞர்களையும் விசாரணைக்காக கூடலூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா எழுச்சி - முன்னெச்சரிக்கையை பின்பற்றுவது தான் சிறந்த வழி

ABOUT THE AUTHOR

...view details