நீலகிரி மாவட்டத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது குன்னூர் அரசு மருத்துவமனை. இங்கு கிராமப்புற பகுதிகளில் உள்ள நோயாளிகள் ஏராளமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 15 நாட்களாக நகராட்சி சார்பாக வழங்கப்படும் தண்ணீர் முறையாக வழங்கப்படாததால் நோயாளிகள் குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.
‘குடிநீர் இல்லாமல் அல்லல்படும் நோயாளிகள்’ - திணறும் மருத்துவமனைகள்! - TN_OOTNATESH 06.06.19 COONOOR GOVERNMENT HOSPITAL
நீலகிரி: குன்னூர் அரசு மருத்துவமனையில் கடந்த பதினைந்து நாட்களாகத் தண்ணீர் இல்லாததால் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் வீடுகளுக்கு திரும்பும் அவலம் ஏற்பட்டுள்ளது.
‘குடிநீர் இல்லாமல் அல்லப்படும் நோயாளிகள்’ - திணறும் மருத்துவமனைகள்...!
இதேபோன்று பிரசவ பிரிவிலும், குழந்தைகள் தங்கும் அறைகள் மற்றும் கழிவறைகளிலும் போதுமான தண்ணீர் இல்லாததால் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் வீடுகளுக்கு திரும்பும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு முறை மாவட்ட ஆட்சியர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.