நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று குறித்து பேச மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,471 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். தற்போது அவர்களின் 28 நாள்கள் வீட்டுக் கண்காணிப்பு முடிந்த நிலையில், யாருக்கும் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே நீலகிரி மாவட்டம் அடுத்த வாரம் பச்சை மண்டலத்துக்குள் (Green zone) வந்துவிடும். நோய்த் தொற்றுள்ளவர்கள் வசிக்கும் பகுதிகள் தற்போது சீல் வைக்கப்பட்டு, கண்காணிக்கபட்டு வருகிறது. இப்பகுதிகள் மே 7ஆம் தேதி வரை சீல் வைத்து கண்காணிக்கப்படும்.
கடந்த 18 நாள்களாக எந்தப் புதிய தொற்றும் ஏற்படவில்லை. புதிய தொற்று ஏற்படாமல் இருக்க மாவட்டத்தை இணைக்கும் அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் காண்காணிப்பு தீவிரப்படுத்தபட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களை எடுத்து வரும் ஓட்டுநர்கள், சோதனை மேற்கொள்ளபட்ட பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மக்கள் பலரும் முகக் கவசம் அணிவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. தொடர்ந்து முகக் கவசம் அணியாமல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முட்டை வழங்கிய அமைச்சர்