நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியில் வனவிலங்குகள், பறவைகள் பெருமளவில் வாழ்ந்துவருகின்றன. தற்போது பெய்த கனமழையின் காரணமாக விலங்குகளும், பறவைகளும் இடம்பெயர்ந்துள்ளன. இதனால் உணவு, தண்ணீரைத் தேடி இவை குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்கின்றன.
இந்நிலையில், சமவெளிப் பகுதியில் இருக்கும் பறவைகள் பொதுவாக நீலகிரியின் தட்பவெப்ப நிலையினால் இங்கு வருவதில்லை. ஆனால் தற்போது முதல் முறையாக குன்னூர் பகுதிக்கு வெளவால்கள் கூட்டம் படை எடுத்துள்ளன. இந்த வெளவால்கள் குறிப்பாக வெலிங்டன் பகுதியில் உள்ள மரங்களில் கூட்டமாக இருக்கின்றன.