கரோனா பாதிப்பு நிதியாக தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தனது ஒரு மாத சம்பளமான ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று வழங்கினார்.
அதேபோல் தமிழ்நாட்டில் முதல்முறையாக உதகையில் பணியாற்றி வரும் தற்காலிக, நிரந்தர தூய்மை பணியாளர்கள் 500 பேர் சார்பாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நீலகிரி ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.