நீலகிரி: கூடலூரை அடுத்த சேரம்பாடி பத்தாவது லைன் நான்கு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தேயிலை தோட்டம் உள்ளது. இப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று எந்தவொரு அசைவுமின்றி இருப்பதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மருத்துவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுத்தைக்கு சிகிச்சையளிக்கும் போது அது உயிரிழந்தது.