நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு திட்டுக்கல் என்னும் பகுதியில் உள்ளது. இந்தக் குப்பைக் கிடங்கில் நேற்றிரவு ஏழு மணி அளவில் குப்பைக் குழியில் ஏற்பட்ட தீ மளமளவெனப் பரவி பயங்கர தீயாக உருமாறியது. இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இந்தத் தகவலின் பெயரில் உதகை தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து இரண்டு தண்ணீர் வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.