தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பன்றிக்கு வைத்த வெடியை சாப்பிட்ட காட்டெருமை படுகாயம்! - காட்டெருமை

நீலகிரி: குன்னூரில் பன்றிக்கு வைத்த வெடியை கடித்த காட்டெருமை, வாய் பகுதி கிழிந்த நிலையில் சாப்பிட முடியாமல் சுற்றி வருகிறது.

காட்டெருமை
காட்டெருமை

By

Published : Jan 27, 2021, 8:14 AM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில், ஏராளமான காட்டெருமைகள் உள்ளன. இவை அடிக்கடி நகர்ப் பகுதிகளுக்குள் வருவது வழக்கம். இவை இரவு நேரங்களில் வீடுகள் மற்றும் பங்களாக்களில் அமைக்கப்பட்டுள்ள வேலிகளை தாண்டும் பொழுது காயமடைந்து வருகின்றன.

இந்நிலையில், வெலிங்டன் ராணுவ பகுதியில் கடந்த 3 நாள்களாக காட்டெருமை ஒன்று வாய்கிழிந்த நிலையில் சுற்றி வருகிறது. உணவு உண்ண முடியாமலும் தண்ணீர் குடிக்க முடியாமலும் தவித்து வருகிறது. இதுகுறித்து வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இருப்பினும், காட்டெருமைக்கு வனத்துறை சிகிச்சை அளிக்காமல், மெத்தனம் காட்டி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

பன்றிக்கு வைத்த வெடியை சாப்பிட்ட காட்டெருமை படுகாயம்

இப்பகுதிகளில் பன்றிக்கு வைக்கும் வெடியால் காட்டெருமைகள் இறப்பது சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details