நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு ஜெகதளா சாலையில் விநாயகர் கோயில் உள்ளது. இதன் அருகில் அறநிலையத் துறை இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தை வணிக வளாகமாக பயன்படுத்தியதாக இந்து அறநிலையத் துறையினருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, கோவை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விமலா தலைமையில் அலுவலர்கள் மண்டபத்தை சீல் வைக்க வந்தனர்.
குன்னூரில் அறநிலையத்துறை அலுவலர்களை முற்றுகையிட்ட மக்கள் - nilgiris vinayagar temple mandapam seized by Charity Department officials
நீலகிரி: குன்னூரில் விநாயகர் கோயில் மண்டபத்தை சீல் வைக்க வந்த அறநிலையத்துறை அலுவலர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அறநிலை துறை அலுவலர்கள்
மண்டபத்தை சீல் வைக்க முயன்ற அறநிலை துறை அலுவலர்கள்
ஆனால், அருவங்காடு பகுதி மக்கள், கோயில் கமிட்டியினர் இணைந்து அறநிலையத் துறை அலுவலர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:'குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்'
TAGGED:
nilgiri protest news