நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ளது கோபாலபுரம். இந்த பகுதியைச் சுற்றி சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளன. அண்மையில் இந்த பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் வெளி மாவட்டங்களுக்குச் சென்று வந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டார்.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தடுப்பு வேலிகள் அமைத்து, வெளிபகுதியிலிருந்து ஆட்கள் வரத் தடை விதித்தனர். மேலும் தங்களைத் தாங்களே பாதுகாக்கும் நோக்கில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.