நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் 26 வளர்ப்பு யானைகள் உள்ளன. இந்த யானைகள் வனப்பகுதியில் ரோந்து செல்வதற்கும், விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டவும் பயன்படுத்தபடுகின்றன. மேலும் ஆட்களை அடித்துக் கொல்லும் காட்டு யானைகளை பிடிக்கும் பணியிலும் ஈடுபடுகின்றன. தமிழ்நாடு முழுவதும் சென்று இந்த கும்கி யானைகள் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கோயில் யானைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்படும் புத்துணர்வு நலவாழ்வு முகாம் போல் இந்த யானைகளுக்கும் புத்துணர்வு முகாம் நடத்தபட்டு வருகிறது.
இந்த நிலையில் முதுமலை வளர்ப்பு யானைகளுக்கான பத்துணர்வு முகாம் தொடங்கியது. 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு தொடங்கி வைத்து, யானைகளுக்கு உணவு பொருள்களை வழங்கினார். புத்துணர்வு முகாம் தொடங்கியதை அடுத்து 48 நாட்கள் வளர்ப்பு யானைகளுக்கு முழு ஓய்வு அளிக்கப்படுவதுடன் சத்தான உணவுகளும், மருத்துவ சிகிச்சைகளும், லேகியம், சத்து மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு உணவுகளும் அளிக்கப்படும்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,