கரோனா பாதிப்பிலிருந்து நீலகிரி மாவட்டம் விடுபட்டிருக்கும் நிலையில் மீண்டும் வைரஸ் (தீநுண்மி) பரவாமலிருக்க, குன்னூர் உலிக்கல் ஊராட்சிக்குள்பட்ட நெடிமந்து கிராம தோடர் இன மக்கள் பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்தினர்.
கரோனாவிலிருந்து மீள தோடர் இன மக்கள் சிறப்பு வழிபாடு - corona in nilgiri
நீலகிரி: நெடிமந்து தோடர் இன மக்கள் கரோனா பாதிப்பிலிருந்து மீளவும், பரவாமலிருக்கவும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தோடர் இன மக்கள் சிறப்பு வழிபாடு
இது குறித்து அவர்கள், "நீலகிரி மாவட்ட மக்களுக்கு கரோனா மீண்டும் பரவாமலிருக்க தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடத்திவருகிறோம். மேலும் அந்தத் தீநுண்மி பாதிப்பிலிருந்து தீர்வு கிடைக்கவும், கரோனா பிடியிலிருந்து அனைவரும் விடுபடவும் வழிபாடு செய்துவருகிறோம்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் தானியங்கி அதிநவீன கிருமி நாசினி இயந்திரம்