தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் ஜனவரி மாதத்திற்கான தேயிலை விலை நிர்ணயம்!

நீலகிரியில் பச்சை தேயிலைக்கு, ஜனவரி மாதத்திற்கான விலை கிலோவிற்கு 18 ரூபாய் 58 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

தேயிலை விலை நிர்ணயம்
தேயிலை விலை நிர்ணயம்

By

Published : Feb 2, 2023, 1:37 PM IST

நீலகிரி: மாவட்டத்தில் 65,000 மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலைகளை தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனர். இந்திய தேயிலை வாரியம் மாதத்தின் இறுதி நாளில், அந்த மாதம் தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்துள்ள பச்சை தேயிலையின் விலையினை நிர்ணயிக்கும்.

அதன்படி ஜனவரி மாதத்திற்கான பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச சராசரி விலையாக கிலோவிற்கு 18 ரூபாய் 58பைசா என நிர்ணயம் செய்துள்ளது. இது ஜனவரி மாதம் தேயிலை ஏல விற்பனையின் விலையின் அடிப்படையில் தேயிலை வாரியம் நிர்ணயித்துள்ளது. இந்த விலையினை தேயிலை தொழிற்சாலைகள் தவறாமல் வழங்குகிறதா என்று தேயிலை வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக, தேயிலை வாரிய முதன்மை அதிகாரி முத்துக்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தலைமுறை தலைமுறையாக சுடுகாடு பாதை பிரச்சனை.. வேதனையில் தவிக்கும் பட்டியல் சமூக மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details