ஊட்டி:நீலகிரியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஊட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் தன் கர்ப்பமான மனைவியுடன் வாழ்ந்து வந்து உள்ளார். அந்த இளைஞர் பிரபல சுற்றுலாத்தள பகுதியில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் கஞ்சா, மது உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையான இளைஞர் சரிவர வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை, அதே பகுதியைச் சேர்ந்த தனக்கு சுற்றுலாதளத்தில் வேலை வாங்கி கொடுத்தவரின் மகளை, இளைஞர் பார்த்துள்ளார்.
பள்ளி முடிந்து திரும்பிய மாணவியை கண்ட இளைஞர், அவரை வீட்டில் விடுவதாக கூறி அழைத்துச் சென்றதாகவும், யாரும் இல்லாத இடத்தில் வைத்து மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. பின்னர் நேர்ந்த கொடுமை குறித்து வீட்டில் கூறுவதாக தெரிவித்த சிறுமியை, அந்த இளைஞர் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
மாணவி மயக்கமடைந்து கிழே விழுந்ததாகவும் அதன் பிறகும் விட்டுவைக்காத இளைஞர் மாணவின் கழுத்தில் இருந்த பள்ளி அடையாள அட்டையின் கயிற்றால் கழுத்தை இறுக்கி மூச்சுத் திணற கொலை செய்துள்ளார். மாணவியின் சடலத்தை அருகில் இருந்த முட்புதரில் வீசிவிட்டு எதுவும் நடக்காதது போல் இளைஞர் சென்றதாக கூறப்படுகிறது.