நாடு முழுவதும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கரோனா முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபடும் காவல்துறையினருக்கு பழம் வழங்கும் நீலகிரி மக்கள் இந்த நிலையில் உதகையில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு ஸ்டாபெரி, வாழை உள்ளிட்ட பழங்களை விவசாயிகள் வழங்கி வருகின்றனர்.
அதேபோல் பொதுமக்கள் வீடுகளிலிருந்து குலோப் ஜாம், சாக்லெட் போன்றவைகள் செய்து காவலர்களுக்கு வழங்கி பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதனால் காவல்துறையினரும், துப்புரவு பணியாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் தலைமையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை