தமிழ்நாட்டின் சொர்கபுரியான ஊட்டி வர சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவதால், மேட்டுப்பாளையத்தில் இருந்து கூடுதலாக வாரம் ஒரு முறை சிறப்புத் தொடர்வண்டி இயக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் ஊட்டி - கேத்தி இடையே தினமும் சிறப்புத் தொடர்வண்டி கோடை காலத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் கண்ணாடி மேற்கூரை, குளிர்சாதன வசதி கொண்ட சிறப்புப் பெட்டிகள் தென்னக ரயில்வே கொண்டு வந்தது. இந்த இரு முதல் வகுப்பு பெட்டிகளுடன், இரண்டாம் வகுப்பு கொண்ட பெட்டியும் இணைத்து, குன்னூர் – ரன்னிமேடு இடையே வரும் 27ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை சிறப்புத் தொடர்வண்டி இயக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க சொகுசு ரயில் பெட்டி! - தென்னக ரயில்வே அறிவிப்பு
நீலகிரி: குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரை சுற்றுலா பயணிகளுக்காக சிறப்பு தொடர்வண்டி இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
குன்னூரிலிருந்து காலை 11:30மணிக்கு புறப்படும் இந்த தொடர்வண்டி ரன்னிமேடுக்கு பிற்பகல் 12:00 மணிக்கு சென்று சேரும். பிறகு அங்கிருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டு குன்னூருக்கு 1:30 மணிக்கு வந்து சேரும். மொத்தம் 86 இருக்கைகள் கொண்ட இதற்கு, குன்னூர் தொடர்வண்டி நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முதல் வகுப்பிற்கு ரூ.450 எனவும், இரண்டாம் வகுப்பிற்கு ரூ.320 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ரயில்வே நிர்வாகத்தின் குறிப்பிட்ட சில பொருட்கள் இலவசமாக சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனால், நீலகிரி மலை தொடர்வண்டி சேவை புத்துயிர் பெற்று வருவதாகச் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சித் தெரிவித்திருக்கின்றனர்.