தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா கட்டுப்பாடுகள்: கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம்!

நீலகிரியில் கரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம்
கரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம்

By

Published : Oct 2, 2020, 8:32 PM IST

நீலகிரி: உதகை நகரில் கரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத தனியார் வங்கிகள், வியாபார நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் அதிரடி நடவடிக்கையில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.

மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு 200 ரூபாய் வரை அபராதமும், தகுந்த இடைவெளியை கடைபிடிக்காத வியாபார நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தொகை அபராதமும், நிறுவனங்களுக்கு சீல் வைக்கும் பணிகளிலும் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக உதகமண்டலம் நகராட்சி அலுவலர்கள், வருவாய் துறையினர் உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காத உஜ்ஜிவன் வங்கிக்கு ஐந்து ஆயிரம் அபராதம் விதித்து மூன்று நாள்கள் வங்கிக்கு சீல் வைத்தனர். அதேபோல கனரா வங்கிக்கு ஐந்து ஆயிரம் அபராதம் விதிக்கபட்டது.

மேலும், வியாபாரா நிறுவனங்களை ஆய்வு செய்த அலுவலர்கள் விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதித்தனர். மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தனியார் நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும், இல்லையென்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என நகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜவுளி கடைக்குச் சீல் வைத்த அரியலூர் மாவட்ட ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details