தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராணுவ வீரர்களுக்கு சத்திய பிரமாணம் - வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம்

நீலகிரி: குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திலிருக்கும் ராணுவ வீரர்களுக்கு சத்திய பிரமாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணுவ வீரர்களுக்கு சத்திய பிரமாணம்
ராணுவ வீரர்களுக்கு சத்திய பிரமாணம்

By

Published : Mar 31, 2021, 12:13 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்ந நிலையில் ராணுவ பயிற்சி மையத்தில் முதல் முறையாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் பாதுகாப்பு பணிக்காக 141 ராணுவ வீரர்களுக்கு ஆறு வார கால பயிற்சி அளிக்கப்பட்டது.

இவர்களுக்கு பேரக்ஸ் நாகேஷ் சதுக்கத்தில் சத்திய பிரமாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர். தொடர்ந்து தேசப் பற்றுடன் கொண்டுவரப்பட்ட தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

ராணுவ வீரர்களுக்கு சத்திய பிரமாணம்

தொடர்ந்து பகவத் கீதை, பைபிள், குரான் ஆகியவற்றின் மீதும் தேசியக் கொடியின் மீதும் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அணிவகுத்து நின்ற ராணுவ வீரர்களுக்கு வெலிங்டன் கமாண்டன்ட் பிரிகேடியர் ராஜேஷ்வர் சிங் அறிவுரைகள் வழங்கி பேசினார்.

இதில் ராணுவ அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி சமூக இடைவெளியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்றது.

இதையும் படிங்க:மருத்துவர் சைமனின் உடலை கீழ்பாக்கம் கல்லறைத் தேட்டத்தில் அடக்கம் செய்ய உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details