இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கோவை சி.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில் உள்ள 2 பேர் நலமுடன் உள்ளதால் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள்.
நோய் தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் பகுதி மே ஏழாம் தேதிவரை சீல் வைத்து கண்காணிக்கப்படும். இனி வரும் நாள்களில் சனி, ஞாயிற்று கிழமைகளில் இறைச்சி கடைகள் வழக்கம்போல் செயல்படும்.