தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 8, 2021, 7:21 PM IST

ETV Bharat / state

நீலகிரி செல்ல இபாஸ் தேவையில்லை, இ-ரெஜிஸ்டிரேசன் போதும்- ஆட்சியர்

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் பிற மாநிலத்தவர்களுக்கு இபாஸ் தேவையில்லை என்றும், இ-ரெஜிஸ்டிரேசன் இருந்தாலே அனுமதிக்கபடுவர் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Nilgiris do not need e-pass e-registration is enough said district Collector
Nilgiris do not need e-pass e-registration is enough said district Collector

நீலகிரி:சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கபடும் 868 வாக்குசாவடிகளுக்கான வாக்கு பதிவு இயந்திரங்களை அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணிகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது், "நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மின்னணு வாக்குபதிவு இயந்திரம், ஒப்புகை சீட்டு இயந்திரம், கட்டுபாட்டுக் கருவி உள்பட 3,845 இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கபடும்.

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக வெளி மாநில சுற்றுலா பயணிகள், நீலகிரி மாவட்டத்திற்கு வர இ-ரெஜிஸ்டிரேசன் முறை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் பிற மாநிலத்தவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. இ-ரிஜிஸ்டிரேசன் செய்தாலே அவர்கள் அனுமதிக்கபடுவர் என்றார்.

நீலகிரி செல்ல இபாஸ் தேவையில்லை

குறிப்பாக கேரளாவில் இருந்து வருபவர்களிடம் கரோனா சான்றிதழ் கேட்கபடுவதில்லை. அவரிகளிடமிருந்து பரிசோதனைகான மாதிரிகள் சேகரிக்கபட்ட பின்னர், மாவட்டத்திற்குள் அனுமதிக்கபடுவர். நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவல் கட்டுபாட்டில் உள்ளது. அவை மேலும் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்

ABOUT THE AUTHOR

...view details