நீலகிரி மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குன்னூர் அருகே உள்ள எல்லநள்ளி பகுதி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, குன்னூர் அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய நபர் ஒருவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.