நீலகிரி: குன்னூர் அரசு மருத்துவமனை மிகவும் பழமை வாய்ந்தது. இந்த மருத்துவமனையில் சமீபத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு தன்னார்வலர்கள் மூலம் நவீனமயமாக்கப்பட்டது.
ரூ.10 லட்சம் மதிப்பில் நவீனப்படுத்தப்பட்ட இந்தக் கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பழமையான இந்த மருத்துவனையை நவீனப்படுத்தியது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீலகிரி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும் எஸ்டேட் பகுதிகளில் தொற்று அதிகரித்து வருகிறது.