நீலகிரி:கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் விசாரணை காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை, கொள்ளை வழக்கிற்கு மூல காரணமாக இருந்த கார் ஓட்டுநர் கனகராஜ் சேலத்தில் விபத்தில் உயிரிழந்தார்.
இந்த வழக்கையும் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கனகராஜின் சகோதரர் தனபால், உறவினரான ரமேஷ் ஆகிய இருவரிடமும் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் கோடநாடு கொள்ளை சதித் திட்டம் குறித்து தனபாலுக்குத் தெரிந்திருந்த நிலையில் விசாரணையில் மறைத்தது, கனகராஜின் செல்போன் பதிவுகளை அழித்தது உள்ளிட்ட குற்றத்திற்காக 4 பிரிவுகளின் கீழ் தனபால், உறவினர் ரமேஷை கடந்த 25 ஆம் தேதி தனி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூடலூர் கிளை சிறையில் காவல் துறையினர் அடைத்தனர்.
கூடுதல் விசாரணைக்கு அனுமதி