நீலகிரி மாவட்டம் குன்னுார் வனப்பகுதியில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி, மலபார் அணில்கள் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
சுற்றுலா பயணிகளை கவரும் மலபார் அணில்கள்! - சுற்றுலா பயணி
நீலகிரி: மாம்பழம் கொடுத்தால் வாங்காமல், கிவி பழத்தை மட்டுமே வாங்கி உண்ணும் மலபார் அணில்கள் சுற்றுலா பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதில் சிம்ஸ் பூங்கா நுழைவாயில் அருகே மரக்கிளைகளில், 'மலபார் ஜெயின்ட் ஸ்குரில்' (மலபார் அணில்கள்) நான்கு உள்ளன.
இந்த அணில்கள், இங்குள்ள நசீமா பேகம் என்பவரின் பழக்கடைக்கு நாள்தோறும் வந்து பழங்களை வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.
குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வரும் இந்த அணில்கள், எந்த பழங்களையும் எடுத்து உண்பதில்லை. சீதா, பட்டர்புரூட் போன்ற பழங்களை மட்டுமே அதிகம் ருசித்து உண்கின்றன. பழக்கடைக்கு வரும் சுற்றுலா பயணிகள், அணில்களுக்கு மாம்பழங்களை கொடுத்தால் வாங்கி உண்பதில்லை. மாறாக அவர்களிடமிருந்து கிவி பழத்தை மட்டுமே வாங்கி உட்கொண்டு செல்கின்றன. இதனை காணும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியப்படுவதுடன், புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.